நாங்க கோட்டை விட்டது அங்கதான்… ஆனாலும் இது வெற்றிகரமான தோல்விதான் – ஷிகார் தவான்!

vinoth

புதன், 10 ஏப்ரல் 2024 (07:32 IST)
ஐபிஎல்-2024  லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. நேற்றைய 23 ஆவது போட்டியில், ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே சன்ரைஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் 21 ரன்னும், நிதிஷ்குமார் ரெட்டி 64 ரன்னும், அப்துல் சமட் 25 ரன்னும், சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 182 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசி வரை போராடி 180 ரன்கள் மட்டுமே சேர்த்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஷஷாங்க் 25 பந்துகளில், 46 ரன்களும், அஷுடோஷ் ஷர்மா 15 பந்துகளில் 33 ரன்களும் சேர்த்ததன் மூலம் போட்டி கடைசி பந்து வரை விறுவிறுப்பாக சென்றது.

இந்த தோல்வி குறித்து பேசியுள்ள பஞ்சாப் அணிக் கேப்டன் ஷிகார் தவான் “நாங்கள் அவர்களை நல்ல ஸ்கோரில் கட்டுப்படுத்தினோம். ஆனால் நாங்கள் பவர்ப்ளே ஓவர்களில் சரியாக விளையாடாமல் விக்கெட்களை இழந்தோம். இதனால் எங்கள் திட்டத்தை மாற்றி விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. நாங்கள் சில கேட்ச்களை தவறவிட்டோம். அதுமட்டுமில்லாமல் கூடுதலாக 10 முதல் 15 ரன்களைக் கொடுத்துவிட்டோம். நாங்கள் வெற்றிபெறுவோம் என நினையில் மிக அருகில் வந்து தோற்றிருக்கிறோம். இது வெற்றிகரமான தோல்விதான். இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவோம்” எனக் கூறியுள்ளார். 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்