இது என்ன பெங்களூர் மைதானமா?... தினேஷ் கார்த்திக் பேட்டிங்கை வறுத்தெடுத்த சேவாக்!

திங்கள், 31 அக்டோபர் 2022 (15:14 IST)
இந்திய அணியின் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பை தொடரில் மிக மோசமாக விளையாடியுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக அணியில் தனது இடத்துக்காக போராடிவந்த தினேஷ் கார்த்திக் தனது 37 ஆவது வயதில் தற்போது டி 20 அணியில் பினிஷராகக் கலக்கி இடம்பிடித்து வருகிறார். இதையடுத்து தற்போது அணியில் இடம்பிடித்து வரும் அவர் ஆசியக் கோப்பை தொடரில் இடம்பிடித்தார்.

ஆனால் இதுவரை அவர் விளையாடிய 2 போட்டிகளிலும் அவர் நல்ல ஸ்கோரை செய்யவில்லை. இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் பீல்டிங் செய்த போது பாதியிலேயே முதுகுவலி காரணமாக வெளியேறினார். அதன் பின்னர் ரிஷப் பண்ட் மாற்று விக்கெட் கீப்பராக களமிறங்கினார்.

இந்நிலையில் தினேஷ் கார்த்திக் பற்றி பேசியுள்ள வீரேந்திர சேவாக் “முதல் போட்டியில் இருந்தே நான் பண்ட்தான் அணியில் இருக்கவேண்டும் எனக் கூறிவருகிறேன். பண்ட் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடியவர். கடைசியாக தினேஷ் கார்த்திக் எப்போது ஆஸ்திரேலியாவில் விளையாடினார். தீபக் ஹூடாவுக்கு பதிலாக ரிஷப் பண்ட் இருந்திருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்