இந்நிலையில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக கிசுகிசுக்கள் உலவ ஆரம்பித்தன. அவரை சி எஸ் கே அணி ட்ரேடிங் மூலமாக வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சஞ்சு சாம்சனைக் கொடுத்துவிட்டு ஜடேஜாவைப் பெற்றுக்கொள்ள அந்த அணி விருப்பம் தெரிவித்ததாக சொல்லப்பட்டது.
ஆனால் ஜடேஜாவைக் கொடுக்க சி எஸ் கே அணிக்கு விருப்பமில்லை என சொல்லப்பட்டுவிட்டதாக முன்னர் தகவல் பரவியது. இந்நிலையில் இப்போது மீண்டும் சஞ்சு- ஜடேஜா ட்ரேட் பேச்சுவார்த்தைத் தீவிரமாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. சாம்சனுக்குப் பதில் ஜடேஜாவை மட்டுமில்லாமல் டிவால்ட் பிரவீஸையும் ராஜஸ்தான் அணி கேட்பதாக சொல்லப்படுகிறது.