சனத் ஜெயசூர்யா அரசியலிலிருந்து விலகுவதாக அறிவிப்பு; அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்

திங்கள், 6 ஜூலை 2015 (15:08 IST)
இலங்கை அணியின் முன்னாள் அதிரடி வீரர் சனத் ஜெயசூர்யா அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
 

 
இலங்கை அணியின் அதிரடி தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான ஜெயசூர்யா, 1996ஆம் ஆண்டு இலங்கை உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார். கிரிக்கெட் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
 
முந்தைய மகிந்த ராஜபக்சே அரசில் துணை அமைச்சராக பதவி வகித்துவந்த ஜெயசூர்யா, தனது சொந்த மாவட்டமான மாத்தறையில் இருந்து 2010ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
அவர் 74 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தார். இதன் மூலம், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் அரசில் ஜெயசூர்யாவுக்கு துணை மந்திரி பதவி கிடைத்தது.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சனத் ஜயசூரிய இராஜினாமா செய்துள்ளார். அனைத்து அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் தான் விலகுவதாக அறிவித்துள்ளார்.
 
மேலும், வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்றும் சனத் ஜெயசூர்யா அறிவித்துள்ளார். தற்போது வெளிநாட்டுக்கு விஜயம் செய்துள்ள சனத் ஜெயசூர்யா தொலைபேசி ஊடாக அத தெரணவிடம் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்