இந்தியாவில் கிரிக்கெட் இளைஞர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான விளையாட்டு. விடுமுறை காலம் வந்தாலே நிதி வசூலித்து ஆங்காங்கே லோக்கல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது வழக்கம். இப்படியான கிரிக்கெட் போட்டிகளில் சில சமயம் ஐசிசியின் விதிமுறைகளையெல்லாம் மிஞ்சிய பல புதிய விதிமுறைகள் பின்பற்றப்படுவதும் உண்டு.
பவுண்டரி லைனில் வந்த பந்தை அங்கிருந்த ஃபீல்டர் பிடித்து மேலே வீசிவிட்டு லைனை தாண்டி குதிக்கிறார். ஆனால் பந்து பவுண்டரி லைனை தாண்டி வந்தது. அதை கேட்ச் பிடித்தால் அவுட் செல்லுபடியாகாது என்பதால் சூதானமாக செயல்பட்ட ஃபீல்டர் கால்பந்து போட்டிகளில் செய்வது போல கிரிக்கெட் பந்துக்கு பைசைக்கிள் கிக் ஒன்றை கொடுத்து கிரவுண்டுக்குள் தள்ளுகிறார். அதை அங்கிருந்த வீரர் ஒருவர் கேட்ச் பிடித்து அவுட் ஆக்குகிறார்.