இந்நிலையில் இன்று போட்டி நடக்கும் மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு மோசமான புள்ளிவிவரங்களே இதுவரை பதிவாகியுள்ளன. அதுபற்றி பேசியுள்ள அவர் “நன் என்னுடைய ரெக்கார்டைப் பற்றி யோசிக்கவில்லை. கடந்த முறை உலகக் கோப்பையில் விளையாடிய அணியை விட இந்த அணி ஆதிக்கம் செலுத்தும் அணியா என்பது குறித்து பேச விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை அனைத்து உலகக் கோப்பை அணிகளும் ஆதிக்கம் செலுத்தும் அணியாகதான் இருந்தது” எனக் கூறியுள்ளார்.