இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தன்னுடைய நாஸ்டால்ஜியா ஒன்றை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் புனேவில் உள்ள ஒரு மைதானத்துக்கு சென்ற அவர் அந்த மைதானத்தில் 15 வயது பையனாக இருக்கும் போது தான் விளையாடிய போட்டியைப் பற்றி நினைவு கூர்ந்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் “நான் இங்கு விளையாடிய போட்டியில் ரன் அவுட் ஆகி வெளியேறிய போது அழுதுகொண்டே பெவிலியன் திரும்பினேன்” என தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.