அணியில் எனது ரோல் இதுதான்… ராஜஸ்தானுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பேசிய ருதுராஜ்!

vinoth

திங்கள், 13 மே 2024 (06:53 IST)
நேற்று சென்னையில் சி எஸ் கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டியில் சி எஸ் கே அணி ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. அதன் படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஆரம்பம் முதல் பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க திணறினர். இதனால் அந்த அணியின் ரன்ரேட் அதலபாதாளத்துக்கு சென்றது. இதனால் அந்த அணி 20 ஓவர்களில் முடிவி 5 விக்கெட்கள் இழுப்புக்கு 141 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அதன் பின்னர் பேட் செய்த சி எஸ் கே அந்த இலக்கை 19 ஆவது ஓவரில் எட்டிப்பிடித்து தங்கள் ஏழாவது வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம் சி எஸ் கே அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சி எஸ் கேவின் இந்த வெற்றியால் ஆர் சி பி, டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ ஆகிய அணிகளின் ப்ளே ஆஃப் வாய்ப்பு மேலும் குறைந்துள்ளது. 

இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் “இந்த போட்டியில் நாங்கள் ஒரு விக்கெட் இழந்து ஆடிய போது கொஞ்சம் பயந்தேன். ஏனென்றால் நாங்கள் அந்த நேரத்தில் சில விக்கெட்களை விட்டிருந்தால் அவர்கள் கை ஓங்கியிருக்கும். எங்கள் அணியில் நிறைய அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளார்கள். அதனால் என்னுடைய வேலை என்பது இறுதிவரை களத்தில் இருப்பதுதான். இதுபோன்ற மைதானங்களில் விளையாட ஆர்வமாக இருக்கிறோம்.” எனப் பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்