“இந்த அணியை நான்தான் கட்டமைத்தேன்… ஆனால் இதுதான் எனது கடைசி” – மும்பை அணி குறித்த அதிருப்தியை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா?

vinoth

சனி, 11 மே 2024 (08:10 IST)
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை திடீரென மும்பை அணியால் ட்ரேட் செய்யப்பட்டார். அது மட்டுமில்லாமல் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கேப்டனாக்கப் பட்டார். இந்த முடிவு மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. இது அணியில் உள்ள ரோஹித் ஷர்மா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்பட்டது. அதனால் இந்த ஆண்டோடு அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆடமாட்டார் எனவும் தகவல்கள் பரவின.

இந்நிலையில்தான் இணையத்தில் ரோஹித் ஷர்மா கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் அபிஷேக் நாயரோடு பேசும் ஒரு வீடியோ இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில் அவர்கள் பேசுவது தெளிவாகக் கேட்கவில்லை என்றாலும், ரசிகர்கள் அந்த வீடியோவில் உள்ள நாய்ஸை நீக்கிவிட்டு அவர்கள் பேசுவதை இணையத்தில் வெளியிட்டனர்.

அதில் ரோஹித் ஷர்மா “இங்கு (மும்பை இந்தியன்ஸில்) எல்லாமே மாறிக் கொண்டிருக்கிறது. இந்த அணியை நான்தான் உருவாக்கினேன். இது என் கோயில் போன்றது. ஆனால் எனக்கு இதுதான் கடைசி” என்று பேசுகிறார். இந்த வீடியோ இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியது. இதில் உள்ளது உண்மையில் ரோஹித் ஷர்மாவின் குரல்தானா இல்லை ரசிகர்கள் உருவாக்கிய போலி உரையாடலா என்ற குழப்பம் நீடித்து வருகின்றது. அடுத்த ஆண்டு மெகா ஆக்‌ஷன் நடக்க உள்ள நிலையில் ரோஹித் ஷர்மா மும்பை அணியில் நீடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்களுக்கும் உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்