ஷமி ஆஸ்திரேலியா சீரிஸில் விளையாடுவாரா?... ரோஹித் ஷர்மா அளித்த பதில்.!

vinoth

புதன், 16 அக்டோபர் 2024 (07:19 IST)
காயத்தினால் அவதிப்படும் ஷமி, கிரிக்கெட்டில் இருந்து சில மாதங்கள் விலகி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். கணுக்கால் காயம் காரணமாக அவதிப்படும் அவருக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை லண்டனில் நடந்தது.

அதையடுத்து இப்போது அவர் காயத்தில் இருந்து மீண்டெழுந்து வருகிறார். இந்நிலையில் அவர் விரைவில் நடக்கவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் தற்போது அவர் முழங்கால் வீக்கத்தால் அவதிப்பட்டு வருகிறாராம். இதனால் அவர் மீண்டும் அணிக்கு திரும்ப 8 முதல் 9 வாரங்கள் ஆகும் என சொல்லப்படுகிறது. இதனால் அவர் ஆஸ்திரேலிய தொடரிலும் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக ஒரு தகவல் பரவியது.

இதுபற்றி தற்போது பேசியுள்ள இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா “ஷமி பற்றி ஒரு முடிவு எடுப்பது தற்போதைக்குக் கடினமானதாக உள்ளது. அவருக்கு முழங்காலில் வீக்கம் உள்ளது. அதனால் அவர் சிறிது ஓய்வெடுத்து மீண்டும் அணிக்குத் திரும்ப வேண்டியுள்ளது. அவர் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடெமியில் உள்ளார். முழுமையாக குண்மாகாத அவரை நாங்கள் ஆஸ்திரேலிய தொடருக்கு அழைத்துச் செல்ல விரும்பவில்லை.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்