மும்பை பேட்டிங்கில் ஓப்பனிங் இறங்காத ரோஹித் ஷர்மா!
சனி, 6 மே 2023 (15:41 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி நடைபெறும் நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்டது. டாஸ் வென்ற தோனி பந்துவீச முடிவு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியில் வழக்கமாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் ரோஹித் ஷர்மாவுக்கு பதில் கேமரூன் க்ரீன் களமிறங்கினார். கடந்த பல போட்டிகளாக ரோஹித் ஷர்மா சொதப்பி வருவதால் மாறுதலுக்காக அவர் ஒப்பன் செய்யாமல் இருக்கலாம்.
ஆனாலும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கீர்ன் இரண்டாவது ஓவரிலேயே அவுட் ஆனதால் அடுத்து ரோஹித் ஷர்மா களமிறங்கினார்.