நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பரிதாபகரமாக தோற்றது. அதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள்.
இப்போது 36 வயதாகும் ரோஹித் ஷர்மா அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடியும் வரை அவரால் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக நீடிக்க முடியுமா என தெரியவில்லை. அதனால் அடுத்து ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்ததும் அவர் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை துறக்க உள்ளதாகவும், இதற்காக பிசிசிஐ உடன் அவர் ஆலோசனை நடத்துவதாகவும் சொல்லப்படுகிறது.