இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி விலகி உள்ளார். இந்த தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோலி அதில் இடம்பெற்றிருந்தார்.