இந்த தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா “இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் தகுதியே ஒரு அணியாக நாங்கள் பெறவில்லை. பேட்டிங்கில் கே எல் ராகுல் மட்டும்தான் சிறப்பாக விளையாடினார். பவுலர்கள் மைதானத்தை சரியாக பயன்படுத்தவில்லை. ஒரு டெஸ்ட் போட்டியை வெல்ல நீங்கள் ஒரு அணியாக இணைந்து வெல்ல வேண்டும். இந்த மைதானம் பவுண்டரி அடித்து விளையாடக் கூடியதாக இருந்தது. அவர்கள் எப்படி விளையாடினார்கள் என்பதை பார்த்தாலே தெரியும். இன்னிங்ஸ்களிலும் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் தோல்வி அடைந்தோம்” எனக் கூறியுள்ளார்.
மேலும் அணியில் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசாதது குறித்து பேசிய அவர் “அணியில் உங்களுக்கு இடம் கிடைத்தால் நீங்கள் நன்றியோடு சிறப்பாக விளையாட வேண்டும்.” என்று கடுமையாக பேசியுள்ளார். அறிமுக போட்டியில் சிறப்பாக செயல்படாத பிரசித் கிருஷ்ணாவைதான் ரோஹித் ஷர்மா இப்படி விமர்சித்துள்ளார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.