இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 50 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலமாக ஒட்டுமொத்தமாக டி20 போட்டியில் 2288 ரன்களை குவித்து , அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் படைத்துள்ளார். இதற்கு முன்பு நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் ( 2272) அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனை படைத்து இருந்தார். இவருக்கு அடுத்த படியாக பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் (2263), இந்திய அணி கேப்டன் விராட் கோலி (2167) ஆகியோர் இருந்தனர்.
கிரிஸ் கெயில்(102), முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். மேலும் அதிக சிக்சர்கள் வீரர்கள் பட்டியலில் ரோஹித்(349) 4வது இடத்தில் இடத்தில் உள்ளார். அவருக்கு முன்பாக சாகித் அப்ரிடி (476), மெக்கல்லம் (398), ஜெயசூர்யா ( 352) , ஆகியோர் உள்ளனர்.