அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ராஸ் டெய்லர் மற்றும் காலின் டி கிராண்ட்ஹோம் ஆகிய இருவ்ரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி அதிரடியாக 5 ஆவது விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ராஸ் டெய்லர் 42 ரன்களில் ஆவுட் ஆகி வெளியேற கிராண்ட்ஹோம் 28 பந்துகளில் 50 ரன்களில் அவுட் ஆனார். அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர்.
இதனால் நியுசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில்8 விக்கெட்களை இழந்து 158 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்து வீசிய குருனால் பாண்ட்யா 4 ஒவர்களில் 28 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார். கலீல் அகமது 2 விக்கெட்களையும் சஹால் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.