ரிஷப் பண்ட் மட்டும் ஏலத்துக்கு வந்தால்…? ஆகாஷ் சோப்ரா சொன்ன தொகை!

vinoth

வியாழன், 31 அக்டோபர் 2024 (09:01 IST)
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகியுள்ள ஐபிஎல் தொடரில் களமிறங்கி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்தினார்.

இதையடுத்து நடந்த உலகக் கோப்பை தொடரிலும் மிகச்சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு ஒரு காரணியாக அமைந்தார். இந்நிலையில் அவர் வங்கதேசம் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய பழைய பார்முக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் அவர் தலைமை வகித்துவரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஏலத்துக்கு வரவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும்போது “நான் சொல்கிறேன், ரிஷப் பண்ட் மட்டும் ஏலத்துக்கு வந்தால் அவரின் வங்கிக் கணக்கி நிரம்பி விடும். கண்டிப்பாக அவர் 25 அல்லது 30 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்படுவார்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்