3 போட்டிகளாக எந்த பங்களிப்பும் செய்யாத ரவீந்தர ஜடேஜா… என்ன ஆச்சு இவருக்கு?

vinoth

வியாழன், 13 ஜூன் 2024 (15:52 IST)
நடந்து வரும் உலகக் கோப்பை தொடர் பவுலர்களுக்கு அல்வா சாப்பிடுவது போலவும், பேட்ஸ்மேன்களுக்கு போர்க்களத்தில் நிற்பது போலவும் அமைந்துள்ளது. ஐபிஎல் பொன்ற பேட்டிங்குக்கு சாதகமான தொடரில் விளையாடிவிட்டு வந்த வீரர்களுக்கு பல அதிர்ச்சிகளைக் கொடுத்து வருகிறது.

இந்த தொடரில் இந்திய அணியில் பும்ரா, சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட பவுலர்கள் கலக்கி வரும் நிலையில் இந்திய அணியின் மூத்த பவுலரான ஜடேஜா மட்டும் சொதப்பி வருகிறார். அவர் இதுவரை இந்த சீரிஸில் 3 போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்தவில்லை.

அதே போல ஒரு போட்டியில் பேட் செய்ய களமிறங்கிய அவர் டக் அவுட் ஆனார். இதன் மூலம் இந்த சீரிஸில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு துறைகளிலும் எந்த பங்களிப்பையும் அவர் செய்யாமல் சொதப்பி வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்