இதையடுத்து முதலில் பேட் செய்த அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 110 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பாக அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 9 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்களும், அக்ஸர் படேல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து 111 ரன்கள் என்ற எளிய இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே இழந்தது. அதன் பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் நிதானமாக விளையாடி 49 பந்துகளில் 50 ரன்களை சேர்த்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷிவம் துபே 31 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி இலக்கை 19 ஆவது ஓவரில் எட்டி வெற்றி பெற்றது.