இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதமடித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர் பிருத்வி ஷா. அதன் பிறகு அவர் பயன்படுத்திய சுவாசப் பிரச்சனைக்கான சிரப்பில் தடை செய்யப்பட்ட பொருள் இருப்பதாகக் கூறி ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டார். தடை நீங்கி நியுசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடினார்.
இந்நிலையில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில் ரஞ்சி கோப்பை நாயகன் வாசிம் ஜாபர் பிருத்வி ஷாவின் திறமைக் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். அதில் ‘பிருத்வி ஷா சேவாக் போன்ற திறமையான தொடக்க ஆட்டக்காரராக வருவார். ஆனால் அவர் களத்துக்கு வெளியே தனது ஒழுக்கத்தைக் கடைபிடிக்கவேண்டும். அதே நேரத்தில் அவர் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும்’ என யுடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.