அவர் கேப்டன்சியில் பாகிஸ்தான் அணியின் வியூகங்கள் கண்டனங்களை எதிர்கொண்டு வருகின்றன. தொடர்ந்து பல போட்டிகளைத் தோற்ற, பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றையேத் தாண்டவில்லை. அதனால் பாபர் அசாமின் கேப்டன்சி பறிக்க மூன்று பார்மெட்களுக்கும் மூன்று கேப்டன்கள் நியமிக்கப்பட்டனர்.
ஆனால் கடந்த மார்ச்சில் மீண்டும் பாபர் அசாம் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் தலைமையில் பாகிஸ்தான் அணி தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அவர் தற்போது பணிச்சுமை காரணமாக மீண்டும் கேப்டன்சியில் இருந்து விலகியுள்ளார். இனிமேல் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்குப் புதிய கேப்டனாக யார் அறிவிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.