’என் கைது எதிர்பார்த்ததுதான்’’ இம்ரான்கான் வீடியோ வெளியீடு

சனி, 5 ஆகஸ்ட் 2023 (20:45 IST)
‘’என் கைது எதிர்பார்த்ததுதான்’’ என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தன் தன் கட்சிக்காரர்களுக்கு வீடியோ பதிவு மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் இம்ரான் கான்  பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் அவற்றை விற்று சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது. இந்த தீர்ப்பில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து அவர் எம்பி பதவியை இழக்கிறார். அதுமட்டுமின்றி அவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இம்ரா கான் கைது செய்யப்படுவதற்கு முன்பு தன் ஆதவாளர்களுக்காக ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில்,  இந்தக் கைது எதிர்பார்த்ததுதான்.   நான் கைது செய்யப்படுவதற்கு முன்பு இந்த செய்தியை பதிவு செய்தேன். என் கட்சியினர் மற்றும் ஆதரவாளரக்ள் அனைவரும் அமைதியாகவும், உறுதியுடனும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் கைது செய்யப்பட்ட சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்