இந்நிலையில் இதுகுறித்து சூசகமாக பதில் சொல்லியுள்ள தோனி ஐபிஎல்லில் எனது கடைசி ஆட்டம் சென்னையில்தான் நடக்கும் என கூறியுள்ளார். தற்போது ஐபிஎல் போட்டிகள் அரபு அமீரகத்தில் நடப்பதால் தான் அடுத்த ஐபிஎல் போட்டியிலும் பங்கேற்பதை தோனி சூசகமாக சொல்லியுள்ளதாக ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.