இந்நிலையில் கோலியின் ஆட்டம் பற்றி பேசியுள்ள முன்னாள் வீரரான முகமது கைஃப் ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார். அதில் “கோலி எந்தவொரு அணிக்கும் ஆபத்தானவர்தான். ஆனால் அவர் தன்னுடைய ஆக்ரோஷத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அவர் தேவையில்லாமல் இறங்கி வந்து ஆடி எட்ஜ் ஆகி அவுட் ஆனார்.
அவர் தன்னுடைய ஸ்ட்ரைக் ரேட்டை 130 வரை எடுத்து சென்றாலே போதும். அவர் 140 க்குக் கூட ஆசைப்பட தேவையில்லை. இந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினாலே அவர் 70 ரன்கள் வரை சேர்க்க முடியும். அதுவே நல்ல இன்னிங்ஸாக இருக்கும். இன்னிங்ஸ் தொடக்கத்தில் பொறுமை காத்து, மோசமான பந்துகளை மட்டும் பவுண்டரிகளுக்கு அடிக்க முயல வேண்டும்” எனக் கூறியுள்ளார்.