கால்பந்தாட்ட க்ளப் ஆட்டங்களில் பிரபலமான ஸ்பெயினின் லா லிகா போட்டிகள் விமரிசையாக நடந்துவருகின்றன. இதில் நேற்றைய ஆட்டத்தில் பார்சிலோனா அணி வெலன்சியா அணியை எதிர்கொண்டது. முன்னதாக ரியல் சோசிடாடுடனான ஆட்டத்தில் மெஸ்சி கோல் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறு அன்று அவர் கோல் அடித்திருந்தால் ஒரே க்ளப்புக்காக அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் பீலேவை அன்றே சமன் செய்திருப்பார்.