இந்திய எனது ஆன்மீக பூமி… மோடிக்கு ஆதரவாக பேசும் ஹெய்டன்!

வியாழன், 20 மே 2021 (08:53 IST)
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான மேத்யு ஹெய்டன் இந்தியாவை தனது ஆன்மீக இல்லம் எனத் தெரிவித்துள்ளார்.

உலகின் அபாயகரமான தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் மேத்யு ஹெய்டன். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக சில சீசன்களில் விளையாடிய இவர் அப்போது இந்தியாவோடு நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.  இந்நிலையில் இப்போது கொரோனா பேரிடரில் இந்தியா மிக மோசமான உயிர் சேதங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் உலக ஊடகங்கள் அனைத்தும் இந்த விளைவுகளுக்கு மோடியின் பொறுப்பற்ற தலைமையே காரணம் எனக் கூறி குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள ஹெய்டன் ‘இந்தியா கொரோனாவைக் கட்டுப்படுத்த கடுமையாக போராடி வருகிறது. 140 கோடி மக்கள் தொகைக் கொண்ட நாட்டில் கட்டுப்பாடு என்பது அவ்வளவு எளிதானதில்லை. உள்விவரங்களை அறியாமல் உலக மீடியா இந்தியாவை அனாவசியமாக விமர்சித்து வருகின்றன. நான் இந்தியாவில் நிறைய ஆன்மீக பயனம் மேற்கொண்டுள்ளேன். அங்கு என் மீது அன்பு செலுத்திய இந்திய மக்களுக்காக நான் கடமைப்பட்டிருக்கிறேன். அந்த மக்களின் கஷ்டத்தையும் ஊடகங்களின் தவறான செய்திகளையும் பார்க்கும் போது இதயம் ரத்தம் சிந்துகிறது. அந்நாட்டின் பன்மைத்துவம் மீதும் அதன் தலைவர்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்