பசுவின் உடலில் எந்தெந்த தெய்வங்கள் உள்ளனர் தெரியுமா...?
பசுக்கள் இருக்கும் இடம் அருள் சூழும் இடம் என்பதாகும். பசுக்கள் இருக்கும் இடம் ஆரோக்கியத்திற்கு வழிவகுக் கும் இடம் என்பதால்தான். பசு உடலின் பல்வேறு பாகங்களில் பல்வேறு தேவர்கள் வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன.
பிரம்மதேவன் பசுவைப் படைத்தவுடன் அதன் ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இடம் அளித்தார். ஆனால் லட்சுமி தேவி காலம் தாழ்த்தி வந்து தான் வாசம் செய்யவும் பசுவிடம் இடம் கேட்டாள். அப்போது பசு லட்சுமி தேவியிடம், நீ சஞ்சல குணம் உள்ளவள்.
எனது அவயங்களில் எல்லா இடங்களும் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டு விட்டது. கழிக்கும் இடம் மட்டுமே மீதம் உள்ளது என்று சொன்னது. லட்சுமி தேவியும், அந்த இடத்தையாவது எனக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு, பசுவின் குதத்தில் தனக்கான இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்தாள்.
லட்சுமி தேவியைப் போலவே ஆகாயகங்கையும் தனக்கான இடமாக பசுவின் சிறுநீரைத் தேர்ந்தெடுத்தாள். அதனால்தான் பசுவின் சாணம் லட்சுமியின் அம்சமாகவும், சிறுநீர் கங்கையின் அம்சமாகவும் கருதப்படுகிறது.
தலை - சிவபெருமான்
நெற்றி - சிவசக்தி
வலது கொம்பு - கங்கை
இடது கொம்பு - யமுனை
கொம்பின் நுனி - காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள், சராசரி உயிர் வர்க்கங்கள்