பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!

சனி, 10 செப்டம்பர் 2022 (09:05 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி 20 உலகக்கோப்பையை முன்னிட்டு தங்கள் அணிக்கு புதிதாக ஆலோசகரை நியமித்துள்ளது.

டி 20 கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறது. தற்போது நடந்து வரும் ஆசியக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் டி 20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு அணிக்கு ஆலோசகராக ஆஸி அணியின் முன்னாள் வீரர் மேத்யு ஹெய்டனை நியமித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த டி 20 உலகக்கோப்பையின் போதும் ஹெய்டன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்