ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். டெத் ஓவர்களில் யார்க்கர்களாக வீசி இந்த சீசனில் உலகின் சிறந்த வீரர்களான கோலி, டிவில்லியர்ஸ், தோனி உள்ளிட்ட பல வீரர்களின் விக்கெட்களை கைப்பற்றியுள்ளார் நடராஜன். இதையடுத்து இந்திய அணியில் இடம்பிடித்த நடராஜன் மூன்றாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கி 2 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார். அதன் பின்னர் நடந்த 3 டி 20 போட்டிகளிலும் விளையாடி 6 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் வரணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் நடராஜனின் வருகையால் முகமது ஷமியின் இடத்துக்குதான் ஆபத்து. அவரது சிறப்பான செயல்பாட்டால் இந்திய அணி பும்ரா மற்றும் நடராஜன் ஆகிய இருவரை குறுகிய ஓவர் போட்டிகளில் வைத்து விளையாட அணி நிர்வாகம் விரும்பும். அதனால் ஷமியின் இடம் கேள்விக்குள்ளாகியுள்ளது. எனக் கூறியுள்ளார்.