பஞ்சாப் அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

vinoth

சனி, 30 மார்ச் 2024 (21:20 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17 ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 10 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று 11 ஆவது போட்டி லக்னோ வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் நிக்கோலஸ் பூரன் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி களமிறங்கிய லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரரான குயிண்ட்டன் டி காக் அரைசதம் அடித்து 54 ரன்கள் சேர்த்தார். அதையடுத்து அந்த அணியின் கேப்டன் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

க்ருனாள் பாண்ட்யா கடைசி நேர அதிரடியில் இறங்கி 43 ரன்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட்களை இழந்து 199 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணி சார்பாக சாம் கரண் அதிகபட்சமாக மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்.

 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்