ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே சதத்தால் இத்தனை சாதனைகளைப் படைத்துள்ளாரா கோலி

சனி, 10 செப்டம்பர் 2022 (08:36 IST)
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கோலி அடித்த சதம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.

இந்த சதத்த்தின் மூலமாக கோலி டி 20 போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 122 ரன்கள் சேர்த்த கோலிக்கு அடுத்த இடத்தில் ரோஹித் ஷர்மா 118 ரன்களோடும், சூர்யகுமார் யாதவ் 117 ரன்களோடும் உள்ளனர்.

இந்த போட்டியில் விராட் கோலி 6 சிக்ஸர்கள் விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி 20 போட்டிகளில் 100 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். அதுபோலவே 3500 சர்வதேச டி 20 ரன்களை சேர்த்த வீரர் என்ற மைல்கல்லையும் அவர் எட்டியுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் சதமடிக்காத விராட் கோலி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 போட்டியில் 61 பந்துகளில் 122 ரன்கள் சேர்த்து அந்த மோசமான நாட்களை முடிவுக்குக் கொண்டு வந்தார். இந்த ஆசியக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 276 ரன்களோடு அவர் முதல் இடத்தில் இருக்கிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்