இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2017ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். எனினும் குழந்தை குறித்து இருவரும் யோசிக்க நேரமில்லாமல் அனுஷ்கா சினிமா படப்பிடிப்புகளிலும், விராட் கோலி கிரிக்கெட் போட்டிகளிலும் தீவிர ஆர்வம் காட்டி வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் தனது மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்திருந்தார் விராட் கோலி. தற்போது தனது ட்விட்டரில் அனுஷ்கா சர்மா கர்ப்பமாய் இருக்கும் நிலையில் தன்னுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள விராட் கோலி ”நாங்கள் மூன்று பேராக போகிறோம். ஜனவரி 2021ல்..” என்று கூறியுள்ளார்.
அனுஷ்கா சர்மாவிற்கு ஜனவரியில் குழந்தை பிறக்க உள்ளதைதான் கோலி அவ்வாறாக சொல்லியிருக்கிறார். விராட் கோலி தம்பதியினருக்கு குழந்தை பிறக்க இருப்பதையொட்டி அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருவதுடன், குட்டி கோலியை காண ஆவலாக உள்ளதாகவும் கூறி வருகின்றனர்.