கே எல் ராகுலே மோசம்… கோலியும் ரோஹித்தும் அவர விட மோசம்… இது என்னப்பா புது கணக்கா இருக்கே!

vinoth

செவ்வாய், 5 நவம்பர் 2024 (07:54 IST)
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேசக் கிரிக்கெட் ஆடிவந்தாலும், போதுமான அனுபவம் இருந்தும் தேவையான நேரத்தில் கே எல் ராகுலிடம் இருந்து ஒரு நல்ல இன்னிங்ஸ் கிடைப்பதில்லை. அணிக்குத் தேவைப்படும் நேரத்தில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதேதான் நியுசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் நடந்தது. அதனால் அவர் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் அணியில் எடுக்கப்படவில்லை.

இந்திய அணியின் மிகப்பெரிய choker ஆக ராகுல் உள்ளார் என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் அவர மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இப்போது கே எல் ராகுல், கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய மூவர் பற்றி ஒரு புள்ளி விவரம் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கே எல் ராகுல் தான் விளையாடிய கடைசி 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 339 ரன்கள் சேர்த்துள்ளார். ஆனால் கோலியும் ரோஹித்தும் இணைந்து கடைசி 10 இன்னிங்ஸ்களில் 325 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளனர். அந்தளவுக்கு இருவரும் மோசமாக விளையாடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்