உலகக் கோப்பை நெருங்கும் வேளையில் இதுதான் எனக்குப் பயமாக உள்ளது… கபில் தேவ் கருத்து!

ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (08:42 IST)
இந்தியா உள்ளிட்ட 6 ஆசிய நாடுகள் கலந்து கொள்ளும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில் ஆசியக் கோப்பைக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆசியக் கோப்பைக்கான அணியே பெரும்பாலும் உலகக் கோப்பைக்கான அணியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

இந்நிலையில் இப்போது ஆசியக் கோப்பை தொடரில் காயம் காரணமாக விலகியிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் முழு உடல் தகுதி பெற்றுள்ளதாக ஆசியக் கோப்பை தொடரில் இடம் கொடுக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் “இந்திய அணியில் வீரர்கள் காயம் ஏற்பட்டுவிட்டால் அது ஒட்டுமொத்த அணியையே பாதிக்கும். அவர்கள் உடல்தகுதியை முழுமையாக நிரூபித்துவிட்டால் தாராளமாக உலகக் கோப்பை தொடரில் விளையாடலாம். நான் பயப்படும் விஷயம் சில வீரர்கள் மீண்டும் காயமடைந்துவிட்டால் அது சரியான விஷயமாக இருக்காது என்பதுதான். ” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்