உலகக் கோப்பைக்கான நியுசிலாந்து அணி அறிவிப்பு… கேப்டன் யார் தெரியுமா?

திங்கள், 11 செப்டம்பர் 2023 (14:28 IST)
ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக வில்லியம்சன் விரைவில் வர உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் விளையாட முடியாத சூழல் உருவாகலாம் என்ற அச்சம் இருந்தது.

இந்நிலையில் இன்று நியுசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. அதில் நியுசிலாந்து அணிக்குக் கேப்டனாக கேன் வில்லியம்சன் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் கேப்டனாக இருந்தவர்கள் இந்த ஆண்டு மீண்டும் கேப்டனாக செயல்படும் ஒரே வீரராக கேன் வில்லியம்சன் உள்ளார்.

உலகக் கோப்பைக்கான நியுசிலாந்து அணி

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரண்ட் பவுல்ட், டிம் சவுத்தி, டீவன் கான்வே, சாப்மன், லோகி பெர்குசன், ஹென்ரி, மிட்செல், ஜிம்மி நீசம், கிளன் பிலிப்ஸ், இஷ் சோதி, மிட்செல் சாட்னர், ரச்சீன் ரவீந்திரா, வில் யங்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்