“தோனி வந்தால் பவுலர்கள் அழுத்தத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள்..” கே எல் ராகுல் கருத்து!

vinoth

சனி, 20 ஏப்ரல் 2024 (07:54 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.  இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி தோனி, ரஹானே மற்றும் ஜடேஜா ஆகியோரின் நிறப்பான ஆட்டத்தால் 176 ரன்களை சேர்த்தது.

இதன் பின்னர் ஆடிய லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் மிகச்சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். டிகாக் 54 ரன்களும் கே எல் ராகுல் 82 ரன்களும் சேர்க்க, 19 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்களை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கே எல் ராகுல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டது.

போட்டி முடிந்ததும் பேசிய லக்னோ அணிக் கேப்டன் “சி எஸ் கே பேட் செய்யும்போது 160 ரன்கள் எடுத்தால் அது நல்ல இலக்காக இருக்கும் என நினைத்தேன். ஆனால் தோனி வந்த பின்னர் நிலைமை மாறிவிட்டது. அவர் வரும்போது ரசிகர்கள் எழுப்பும் கோஷத்தால் இளம் வீரர்கள் அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். தோனி பவுலர்களை அழுத்தத்துக்கு ஆளாக்கி 15 ரன்கள் வரை கூடுதலாக சேர்த்து விடுகிறார். அடுத்து நாங்கள் சி எஸ் கேவுக்கு எதிராக சென்னையில் விளையாடுகிறோம். ஆனால் லக்னோ மைதானமே மினி சென்னை போலதான் உள்ளது.” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்