ஐபிஎல் 2024 சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சி எஸ் கே அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் தோனி எட்டாவது வீரராக களமிறங்கிய அதிரடியாக விளையாடி வருகிறார். தற்போது 42 வயதாகும் தோனி இந்த சீசனின் வயதான கேப்டனாக உள்ளார். இந்நிலையில் இந்த சீசனோடு அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சி எஸ் கே அணியில் தோனி தலைமையில் விளையாடிய நாராயண் ஜெகதீசன் தோனியைப் பற்றி ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் “ஆர் சி பி அணிக்கு எதிரான ஒரு போட்டியில் நான் கோலி விளையாடுவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அதனால் தோனி என்னை பீல்டிங் மாற சொன்னதை நான் கவனிக்கவில்லை. அதனால் கடுப்பான தோனி ஓவர் முடிந்த போது ”ஒழுங்கா என்ன கவனி… இல்லையா நீ வெளிய போயிடு” எனக் கூறினார்” என தெரிவித்துள்ளார்.