டி 20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்திய பஞ்சாப்… நம்ப முடியாத வெற்றி!

vinoth

சனி, 27 ஏப்ரல் 2024 (07:00 IST)
ஐபிஎல் தொடரில் நேற்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடந்த போட்டி டி 20 வரலாற்றில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இந்த சீசனில் ஆரம்பம் முதலே அதிரடி தொடக்கத்தைக் கொடுத்துவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடக்க ஆட்டக்காரர்கள் இந்த போட்டியிலும் அப்படி ஒரு தொடக்கத்தைக் கொடுத்தனர். சுனில் நரைன் 32 பந்துகளில் 71 ரன்களும் பிலிப் சால்ட் 37 பந்துகளில் 75 ரன்களும் சேர்க்க 12 ரன்களுக்கு மேல் ரன்ரேட் சென்று கொண்டிருந்தது. இவர்கள் அவுட் ஆனதும் வந்த வீரர்களும் அதே அலைவரிசையில் விளையாட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 261 ரன்கள் சேர்த்தது கே கே ஆர்.

இந்த கடின இலக்கோடு களமிறங்கிய பஞ்சாப் அணியும் வாங்கிய அடிக்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களும் சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர். பிரபுஷிம்ரான் 20 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.  மற்றொரு தொடக்க வீரரான ஜானி பார்ஸ்டோ 48 பந்துகளில் 109 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசன் முழுவதும் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக விளையாடும் ஷஷாங்க் சிங் 28 பந்துகளில் 68 ரன்களை சேர்க்க 8 பந்துகள் மீதம் இருக்க பஞ்சாப் அணி இலக்கை எட்டியது. டி 20 கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிகபட்ச ஸ்கோரை சேஸ் செய்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி நிகழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்