ஐபிஎல் திருவிழா 2024: இன்று கொல்கத்தாவை எதிர்கொள்ளும் பஞ்சாப் கிங்ஸ்!

vinoth

வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (10:54 IST)
ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் கடந்த மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை அனைத்து அணிகளும் 7 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளன. இப்போது லீக் சுற்றின் இரண்டாவது பாதி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுவரையிலான போட்டிகளின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

இந்நிலையில் இன்று கொல்கத்தாவில் நடக்கும் 42 ஆவது போட்டியில் புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.

இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி 5 வெற்றிகளைப் பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு துறைகளிலும் பலமாக உள்ளது. எதிர்புறத்தில் பஞ்சாப் அணியில் நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். அந்த அணியில் ஷஷாங்க் மற்றும் அஷுடோஷ் போன்ற இளம் வீரர்களே போராடி சில வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்பதால் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கலாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்