சொந்த ஊர்ல நின்னு அடிக்கணும்..! சேப்பாக் ஸ்டேடியத்தில் அஸ்வின் செய்த சாதனை!

Prasanth Karthick

வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (08:43 IST)

நேற்று தொடங்கி நடந்து வரும் இந்தியா - வங்கதேச டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 339 ரன்கள் எடுத்துள்ள நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.

 

 

நேற்று இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்று வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்த நிலையில் இந்திய அணி 80 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

 

இதில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 102 ரன்களை குவித்தார். முன்னதாக இதே சேப்பாக்கம் மைதானத்தில் 2021ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக 106 ரன்களை அஸ்வின் குவித்திருந்தார். இதன்மூலம் ஒரு மைதானத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சதம் மற்றும் பலமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.
 

ALSO READ: இந்தியா - வங்கதேச கிரிக்கெட் தொடரை தடை செய்ய வேண்டும்: இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
 

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் “சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடுவது எப்போதும் சிறப்பு வாய்ந்ததுதான். இங்கு முழுமையான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறேன். ஒரு கட்டத்தில் களைத்து போன போது எப்படி விளையாட வேண்டும் என ஜடேஜா உதவினார். 2 ரன்கள், 3 ரன்களாக ஓடி ரன் எடுக்க முயற்சிக்க வேண்டாம் என கூறினார்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்