ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜெய்ஷா?

Sinoj

செவ்வாய், 30 ஜனவரி 2024 (15:25 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனும் பிசிசிஐ  செயலாளருமான ஜெய்ஷா ஐசிசி அமைப்பின் தலைவர்  பதவிக்கு போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜெய்ஷா அகமதாபாத்தில் உள்ள மத்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகப் பணியாற்றினார். அதன்பிறகு கடந்த 2013 ஆம் ஆண்டு குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலாளார் ஆனார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பிசிசிஐ-ன் நிதி மற்றும் சந்தைப்படுத்துதல் குழுக்களில் உறுப்பினர் ஆனார்.

அதன்பின்னர், கடந்த 2021 ஆம் அஅண்டு 24 உறுப்பினர்களைக் கொண்ட ஆசிரிய க் கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய்ஷா நியமிக்கப்பட்டார்.

கடந்தாண்டு மீண்டும் அவர் பிசிசிஐ செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வரும் ஹின்லையில், ஐசிசி கிரிக்கெட் கவுன்சில்   நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவிலும் ஜெய்ஷா உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,வரும்  நவம்பர் மாதம் வரவுள்ள ஐசிசி தலைவர் பதவிக்கான தேர்தலில் பிசிசியை  செயலாளர் ஜெய்ஷா போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதனால் அவர்,. ஆசிய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்யள்ளதாகக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்