ஐபிஎல்-2023: சென்னை அணிக்கு எளிய வெற்றி இலக்கு

வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (21:45 IST)
ஐபிஎல்-2023- 16 வது சீசன் போட்டி நடைபெற்று வருகிறது.  மொத்தம் 10 அணிகள் விளையாடி வரும் நிலையில், லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக சன்ரைஸ் ஐதராபாத் அணி விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியில் இரு அணிகளும் டாஸ் போட அழைக்கப்பட்ட  நிலையில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

எனவே, சன்ரைஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இன்றைய போட்டி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஹைதராபாத் அணியில், புரூ, 18 ரன்களும், ஷர்மா 34 ரன்களும், திரிபாதி 21 ரன்களும், மார்க்ரம் 12 ரன்களும், ஜேன்சன் 17 ரன்களும் அடித்தனர்.

எனவே 20 ஓவர்கள் முடிவில் இந்த 7 விக்கெட் இழப்பிற்கு 134  ரன்கள் எடுத்து, சென்னை அணிக்கு 135  ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதையடித்து களமிறங்கியுள்ள சென்னை அணியில் ருதுராஜ் 18 ரன்களும், கான்வே 22 ரன்களும் அடித்து விளையாடி வருகின்றனர். சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 5.2 ஓவர்களில் 42 ரன்கள் அடித்து விளையாடி வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்