மிஸ் பண்ணாதீங்க! - ஆஸி.யை கலங்கடித்த தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சு [வீடியோ]

செவ்வாய், 15 நவம்பர் 2016 (15:23 IST)
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இன்னின்ஸ் மற்றும் 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.


 

ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 85 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகப்பட்சமாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 48 ரன்களும், அதற்கு அடுத்தப்படியாக ஜோ மின்னே 10 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்திலேயே நடையைக் கட்டினர்.

பின்னர் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் குவித்தது. அற்புதமான இன்னிங்ஸை ஆடிய குவிண்டன் டி காக் 104 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக டெம்பா பவுமா 74 ரன்களும், ஹசிம் ஆம்லா 47 ரன்களும், பிளாந்தர் 32 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் 241 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி, 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆஸ்திரேலியா அணியில் மூன்று பேர் மட்டுமே இரட்டை இலக்கத்தை தாண்டினர்.

அதிகப்பட்சமாக உஸ்மான் கவாஜா 64 ரன்களும், டேவிட் வார்னர் 45 ரன்களும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 31 ரன்களும் எடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர் ஜோ பர்ன்ஸ் உட்பட மூன்று பேர் டக் அவுட் ஆகி வெளியேறினர்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் கெய்ல் அப்போட் 6 விக்கெட்டுகளையும், ரபாடா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தெ.ஆ. அணியின் 2ஆவது இன்னிங்ஸ் பந்துவீச்சு வீடியோ:

 

வெப்துனியாவைப் படிக்கவும்