சூதாட்ட சுழலில் சிக்கிய மகளிர் கிரிக்கெட் அணியினர்: சிக்கிய இருவர்!

செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (11:53 IST)
தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை தொடர்ந்து இப்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பந்துவீச்சாளரை சூதாட்டத்திற்கு அணுகியதாக இருவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
 
ஆண்டுதோறும் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி போல, டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரும் சென்னையின் சேப்பாக்க கிரிக்கெட் மைதானத்தை மையமாக கொண்டு நடக்கும். இந்நிலையில், தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் சில வீரர்களை சூதட்டத்தில் ஈடுபட அழைத்ததாக பிசிசிஐ-க்கு புகார் வந்துள்ளது.  
 
இது குறித்த விசாரணையை பிசிசிஐ துவங்கியுள்ள நிலையில், முழு விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் என பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவு தலைமை அதிகாரி அஜீத் சிங் செய்தி வெளியிட்டார். இதனை தொடர்ந்து தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பந்துவீச்சாளரை சூதாட்டத்திற்கு அணுகியதாக இருவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 
கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாண்டு மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த சமயத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் பெங்களூர் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டனர். 
 
அப்போது ஓட்டலில் தங்கியிருந்த பந்துவீச்சாளரை ஜிதேந்திர கோத்தாரி, ராகேஷ் பாப்னா அகியோர் சந்தித்து சூதாட்டத்தில் ஈடுபடும் படி கூறினராம். அந்த பந்துவீச்சாளரை வைத்து அணியில் உள்ள வீராங்கனைகளை சூதாட்டத்தில் இழுப்பது இவரகளது திட்டமாக இருந்ததாம். 
 
அதன்படி குறிப்பிட்ட வீராங்கணையிடம் பேசியுள்ளனர், அந்த வீராங்கணை தற்போது புகார் அளித்துள்ள நிலையில், அவ்விருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்