டி20- கிரிக்கெட்: இந்திய வீராங்கனை தீப்தி சர்மா புதிய சாதனை...

வியாழன், 16 பிப்ரவரி 2023 (17:16 IST)
மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது தென்னாப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

இப்போட்டியில், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், உள்ளிட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.

இதில், நேற்றைய போட்டியில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. வெஸ்ட் இண்டீஸ் அணி 118 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் பந்து வீச்சாளர் தீப்தி சர்மா, 4 ஓவர்கள் வீசி, 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, 3 விக்கெட்டுகள்  கைப்பற்றி நேற்று இந்திய அணி வெற்றி பெற உதவினார்.

இப்போட்டியில், முதல் விக்கெட் தீப்தி சர்மா வீழ்த்தியபோது, புதிய சாதனை படைத்தார்.

அதாவது, சர்வதேச டி-20 போட்டியில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய, முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை தீப்தி சாதனை படைத்துள்ளார்.

இவர்,  19.07 சராசரி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பூனம் யாதவ் 98 விக்கெட்டுகளும், ராதா யாதவ் 67 விக்கெட்டுகளும், ராஜேஸ்வரி 58 விக்கெட்டுகளும்,  ஜூலன் 56 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளனர்.

Deepti Sharma becomes the leading wicket taker for India in T20I history. pic.twitter.com/gTh4DAGYCs

— Johns. (@CricCrazyJohns) February 15, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்