மகளிர் உலகக்கோப்பை டி20: இந்திய அணிக்கு 119 ரன்கள் இலக்கு..!

புதன், 15 பிப்ரவரி 2023 (20:01 IST)
மகளிர் உலகக்கோப்பை டி20: இந்திய அணிக்கு 119 ரன்கள் இலக்கு..!
உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.
 
இன்றைய போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணிய டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியின் டெய்லர் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்து உள்ளார் இந்தியாவின் தீப்தி சர்மா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 119 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் இந்திய மகளிர் அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் இந்திய அணி வென்றாலும் இரண்டாவது இடத்தில் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்