எந்த மாற்றமும் இல்லை.. பேட்டிங்கில் இந்தியா? – சமாளிக்குமா தென்னாப்பிரிக்கா?

ஞாயிறு, 5 நவம்பர் 2023 (13:44 IST)
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்திய அணியும் தென் ஆப்பிரிக்கா அணியும் மோதும் நிலையில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.



இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி ஏழு போட்டிகளிலுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று எட்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்கிறது. உலகக் கோப்பை போட்டிகளின் ஆரம்பத்தில் சேஸிங்கில் மட்டுமே கலக்கி வந்த இந்திய அணி சமீபத்திய சில ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்துவிட்டு இரண்டாவதாக அதிரடியாக இறங்கி விக்கெட்டுகளை வீழ்த்தி அசாதாரணமான வெற்றிகளை பெற்று வருகிறது.

இந் நிலையில் இன்றும் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது இந்தியா. முடிந்த அளவு ரன்களை முதலிலேயே ஸ்கோர் செய்துவிட்டு பின்னர் தென்னாப்பிரிக்காவின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்துவது இந்தியாவின் திட்டமாக இருக்கிறது. அதற்கு உறுதுணையாக குல்திப் யாதவ், முகமது ஷமி, சிராஜ், பூம்ரா உள்ளிட்ட பலர் அணியில் உள்ளனர். கடந்த போட்டியில் இருந்த பிளேயிங் 11 அணிகள் அப்படியே இந்த போட்டியிலும் தொடருகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்