இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் அலைஸ்டர் குக் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 537 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் ஜோ ரூட் 124 ரன்கள், மொயின் அலி 117 ரன்கள் ஜோ ரூட் 124 ரன்கள் பென் ஸ்டோக்ஸ் 124 ரன்கள் குவித்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நேற்றைய இரண்டாம் நாள் [வியாழக்கிழமை] ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் குவித்திருந்தது. முரளி விஜய் 25 ரன்களுடனும், கவுதம் கம்பிர் 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், இன்றைய மூன்றாவது நாள் தொடக்கத்திலேயே கவுதம் கம்பிர் [28] வெளியேறினார். பின்னர், முரளி விஜய்யுடன், புஜாரா இணைந்தா. இருவரும் நிலைத்து நின்று ஆடினர். ஆட்டநேர முடிவடையும் சிறிது நேரம் முன்பு புஜாரா 124 [17 பவுண்டரிகள்] ரன்களும், முரளி விஜய் 126 [9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்] ரன்களும் எடுத்து வெளியேறினர்.