நிதான தொடக்கத்துக்கு சரியும் விக்கெட்கள் – விராட் கோலி போராட்டம்!

புதன், 2 டிசம்பர் 2020 (10:59 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து போராடி வருகிறது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்று பயண ஆட்டம் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரண்டிலும் ஆஸ்திரேலிய அணி வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்றுள்ள இந்தியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இந்நிலையில் ஆரம்பத்தில் ஷிகார் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் நிதானமாக ஆட்டத்தை தொடங்க தவான் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் கில்லுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலியும் ரன்ரேட்டை குறைய விடாமல் சிறப்பாக எடுத்துச் சென்றார். கில் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த ஸ்ரேயாஸ் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் முறையே 19 மற்றும்  5 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதனால் இந்தியா தற்போது 127 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 47 ரன்களுடனும் பாண்ட்யா 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்