இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், பெங்களூரில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றன.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதில், ரோஹித் சர்மா 61 ரன்னும், கில் 51 ரன்னும், விராட் கோலி 51 ரன்னும் அடித்தனர், ஸ்ரேயாஷ் அய்யர் 94 பந்துகளுக்கு 128 ரன்கள் அடித்து அசத்தினர். கே.எல்.ராகுல் 64 பந்துகளில் 102 ரன்கள் அடித்தார்.
அதேபோல் மற்றொரு சாதனை இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. அதாவது, இந்திய வீரர் கே.எல்.ராகுல் 62 பந்துகளில் சதம் விளாசி, உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் அடுத்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.